அச்சம் எனபது மடமையடா தரும் ஜுன் 17-ல் காத்திருக்கும் ஸ்பெஷல் விருந்து

Posted on by .

அச்சம் எனபது மடமையடா தரும்  ஜுன் 17-ல் காத்திருக்கும் ஸ்பெஷல் விருந்து
அச்சம் எனபது மடமையடா தரும் ஜுன் 17-ல் காத்திருக்கும் ஸ்பெஷல் விருந்து

சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பாடல்கள் பெரிதளவில் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திலும் இணைந்துள்ளது. இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்துள்ள ‘தள்ளிப் போகாதே’, ‘ராசாலி’ ஆகிய பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. யுடியூப் இணையதளத்தில் இப்பாடல்கள் 15 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 

இந்த படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, மற்ற பாடல்களை வருகிற ஜுன் 17-ந் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

 அதற்கு முந்தைய தினம் படத்தை பற்றி கவுதம் மேனன், ஏ.ஆர்.ரகுமான், சிலம்பரசன், மஞ்சிமா மோகன் மற்றும் படக்குழுவினரின் பேட்டிகளை கௌதம்மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் யுடியூப் சேனலில் வெளியிடவிருக்கிறார்களாம். அதோடு, படத்தின் சில காட்சிகளையும் வெளியிடப்போவதாக கூறப்பட்டுள்ளது. 

எனவே, வருகிற ஜுலை 17-ந் தேதி சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்களுக்கு ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் பாடல்கள் உண்மையிலேயே ஸ்பெஷல் விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உண்மை. 

Copyright © 2015 thiraioli.com · All Rights Reserved.